உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரசு கலைக்கல்லுாரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

அரசு கலைக்கல்லுாரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

அரூர், அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் மங்கையர்க்கரசி வெளியிட்டுள்ள அறிக்கை: அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், இன்று, (ஜூன், 11) முதல், வரும், 14 வரை, இளநிலை பாடப்பிரிவுகளான பி.ஏ., தமிழ், பி.ஏ., ஆங்கிலம், பி.ஏ., பொருளியல், பி.ஏ., வரலாறு, பி.காம்., பி.எஸ்.சி., தாவரவியல், பி.எஸ்.சி., கணிதம், பி.எஸ்.சி., கணினி அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு தொடர் கலந்தாய்வு நடக்கவுள்ளது. எனவே இவ்வாய்ப்பினை பயன்படுத்தி மாணவர்கள் கல்லுாரியில் சேர்க்கை பெறலாம். மேலும், இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்களும் இக்கல்லுாரிக்கு வந்து விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !