உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ரேபிஸ் தாக்கி மாணவன் பலி?

ரேபிஸ் தாக்கி மாணவன் பலி?

அரூர்:தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த பேரேரி புதுாரை சேர்ந்தவர் பழனி வேல். இவரது மகன் தினேஷ், 15; சித்தேரி அரசு பழங்குடியினர் மாதிரி மேல்நிலை பள்ளியில், பத்தாம் வகுப்பு படித்தார். நேற்று முன்தினம் தலைவலி ஏற்பட்டு இரவு, 10:30 மணிக்கு தர்மபுரி அரசு மருத்துவமனையில் தினேஷ் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று காலை உயிரிழந்தார். ரேபிஸ் தாக்கி, அவர் இறந்திருக்கலாம் என, கூறப்படுகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின், ரேபிஸ் தாக்கி தினேஷ் இறந்தாரா என்பது தெரிய வரும் என, மருத்துவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை