உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / செந்தில் பப்ளிக் பள்ளியில் மாணவர்கள் குழுமம் துவக்கம்

செந்தில் பப்ளிக் பள்ளியில் மாணவர்கள் குழுமம் துவக்கம்

தர்மபுரி,தர்மபுரி, அதியமான்கோட்டை செந்தில் பப்ளிக் பள்ளியில், மாணவர்கள் குழும தொடக்க விழா நடந்தது. விழாவிற்கு செந்தில் கல்வி நிறுவனங்களின் தலைவர் செந்தில் சி.கந்தசாமி, துணைத்தலைவர் மணிமேகலை கந்தசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். செயலாளர் தனசேகர், தாளாளர் தீப்தி தனசேகர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினர் தர்மபுரி டி.எஸ்.பி., ரவிச்சந்திரன் பேசினார். அவருடைய பேச்சு மாணவர்களுக்கிடையே உற்சாகமூட்டுவதாகவும், தலைமைப்பண்பின் முக்கியத்துவத்தை உணர்த்தக் கூடியதாகவும் பயனுள்ள வகையில் அமைந்தது. செந்தில் பப்ளிக் பள்ளியில், 2025--26ம் ஆண்டிற்கான தலைமை பொறுப்பிலுள்ள மாணவர்கள் சிறப்பாக பணியாற்றுவோம் என உறுதிமொழி ஏற்றனர். பள்ளிக்கு, 100 சதவீதம் வருகை புரிந்த மாணவர்களுக்கு சான்றிதழ், கோப்பை வழங்கப்பட்டன. விழாவில், பள்ளி நிர்வாக அலுவலர் கார்த்திகேயன், முதன்மை முதல்வர் ஸ்ரீனிவாசன், முதல்வர் செந்தில்முருகன், துணை முதல்வர் ராஜ்குமார், கல்வி ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ