உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கடத்துாரில் மாணவியரிடம் கேலி கிண்டல் தட்டிக்கேட்ட மேஸ்திரியை தாக்கிய மாணவர்கள்

கடத்துாரில் மாணவியரிடம் கேலி கிண்டல் தட்டிக்கேட்ட மேஸ்திரியை தாக்கிய மாணவர்கள்

கடத்துார் :கடத்துாரில் மாணவியரை கேலி கிண்டல் செய்த மாணவர்களை தட்டிக்கேட்ட மேஸ்திரிக்கு, மாணவர்கள் தர்ம அடி கொடுத்தனர்.தர்மபுரி மாவட்டம் கடத்துாரில், அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல் நிலைப்பள்ளிகள் தனித்தனியே உள்ளது. பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவியர், பஸ் ஸ்டாண்டில் இருந்து, தினமும் போலீஸ் ஸ்டேஷன், காந்தி நகர் வழியாக சென்று வருகின்றனர். கடத்துார் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வரும் மாணவியர் நேற்று காலை, 8:30 மணியளவில் பஸ் ஸ்டாண்டில் இருந்து பள்ளிக்கு சென்றனர். அப்போது அவ்வழியே அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்ற மாணவர்கள் சிலர், மாணவியரை கேலி கிண்டல் செய்தனர். மாணவியர் பயந்து அலறி உள்ளனர். இதை பார்த்த அவ்வழியே சென்ற கடத்துார் பகுதியை சேர்ந்த கட்டட மேஸ்திரி பாலு,42; மாணவர்களை தட்டிக்கேட்டார். இதில் கோபம் அடைந்த, 20 மாணவர்கள் சேர்ந்து பாலுவை சரமாரியாக தாக்கினர். புகாரின் படி, கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர். தொடர்ந்து அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மணி, மாணவர்களிடம் விசாரணை நடத்தினார். கடத்துாரில் மாணவர்கள் மட்டும் அல்லாமல் காலை, மாலை நேரங்களில் ரோமியோக்கள் சிலர் மாணவியரை கேலி கிண்டல் செய்யும் செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் மாணவியர் அச்சத்துடன் பள்ளிக்கு செல்லும் நிலை உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ