உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் அட்மிட்

அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் அட்மிட்

பாலக்கோடு:அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட, 18 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தர்மபு ரி மாவட்டம், பாலக்கோடு அருகே கன்சால்பைல் கிராமத்திலுள்ள அரசு நடுநிலைப்பள்ளியில், 1 முதல், 8ம் வகுப்பு வரை, 30க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர். நேற்று முன்தினம் பள்ளியில், மாணவ - மாணவியருக்கு வழங்கப்பட்ட மதிய உணவை சாப்பிட்டனர். மாலை பள்ளி முடிந்து அனைவரும் வீடு திரும்பினர். இதில், 10 மாணவர்கள், 8 மாணவியருக்கு இரவு, 9:00 மணிக்கு மேல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்களை, பெற்றோர் பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதில், 3 மாணவர்கள் மேல் சிகிச்சைக்கு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். அவர்களை, பாலக்கோடு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்பழகன் சந்தித்து ஆறுதல் கூறினார். இச்சம்பவம் குறித்து, பள்ளி சத்துணவு அமைப்பாளர் மற்றும் ஆசிரியர்களிடம், மாரண்டஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை