உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சாலையில் தேங்கும் மழை நீரால் அவதி

சாலையில் தேங்கும் மழை நீரால் அவதி

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் டவுன் பஞ்.,க்கு உட்பட்ட திரு.வி.க., நகர் மேற்கில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்-றனர். இப் பகுதியில் மழை நீர் வடிகால் வசதி இல்லை. இந்நி-லையில் சமீபத்தில் பெய்த கன மழையால், அரூர் வனப்பகு-தியில் இருந்து பெருக்கெடுத்து வரும் தண்ணீர் சாலையில் தேங்-கியுள்ளது. மேலும், மழை நீர் செல்ல வழி இல்லாததால், கன-மழை பெய்யும் நேரத்தில் வீட்டிற்குள் தண்ணீர் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் பல ஆண்டுகளாக தொடரும் இந்த பிரச்னைக்கு, டவுன் பஞ்., நிர்வாகம் தீர்வு காணாமல் இருப்பது வேதனை அளிப்பதாக மக்கள் தெரிவிக்கின்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !