உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கரும்பில் வேர்புழு தாக்குதல்: இழப்பீடு வழங்க கோரிக்கை

கரும்பில் வேர்புழு தாக்குதல்: இழப்பீடு வழங்க கோரிக்கை

அரூர்: தர்மபுரி மாவட்டத்தில், அரூர், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்யும் கரும்புகளை கோபாலபுரம் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்து அரவைக்கு அனுப்பி வருகின்றனர். கடந்தாண்டு, நல்ல மழை பெய்ததால், நடப்பாண்டு, கரும்பு சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது.இந்நிலையில், அரூர், மொரப்பூர், கடத்துார் சுற்று வட்டாரத்தில் சாகுபடி செய்துள்ள பல நுாறு ஏக்கர் கரும்பு வயலில், தற்போது வேர்புழு தாக்குதல் அதிகளவில் காணப்படுவதால், தண்டு மற்றும் சோகைகள் காய்ந்துள்ளன. இதனால் மகசூல் பாதிக்கும் என்பதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே, வேர்புழு தாக்குதால் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு, இழப்பீடு வழங்க, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி