பெண் தற்கொலைக்கு காரணமானவர் கைது
அரூர்: அரூர் அடுத்த குமாராம்பட்டியை சேர்ந்தவர் பெருமாள், 35. இவ-ரது மனைவி சந்திரலேகா, 32. இவர்களுக்கு, 2 பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. தம்பதிக்குள் அடிக்கடி குடும்ப தக-ராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த ஜூன், 29ல் வீட்டில் சந்தி-ரலேகா பேனில் துாக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். சந்திரலேகாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது உற-வினர்கள் புகார் படி, அரூர் போலீசார் விசாரித்தனர். இந்நி-லையில், குமாராம்பட்டியை சேர்ந்த வெங்கடேஷ் பிரதாப், 28, என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.இது குறித்து போலீசார் கூறுகையில், 'சந்திரலேகாவிற்கும், வெங்கடேஷ் பிரதாப்பிற்கு இடையே பழக்கம் இருந்து வந்தது. இது குறித்து இருவரது குடும்பத்தினருக்கும் தெரிய வந்ததை அடுத்து, தொடர்பை துண்டித்து விட்டனர். இருவருக்கும் மீண்டும் தொடர்பு ஏற்பட்டு பிரச்னை ஏற்பட்டுள்ளது. மனமு-டைந்த சந்திரலேகா, 'உன்னால் தான் என் வாழ்க்கை வீணாக போய்விட்டது' என, வெங்கடேஷ் பிரதாப்பிடம் கூறி விட்டு, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்' என்றனர்.