ஏரியூரில் தமிழ் சங்கம் தொடக்க விழா
ஏரியூர் :தர்மபுரி மாவட்டம், ஏரியூரில் தமிழ் சங்கம் தொடக்க விழா, தனியார் கல்லுாரியில் நேற்று நடந்தது.கல்லுாரி தாளாளர் பஸ்பநாதன் தலைமை வகித்தார். சின்னப்பள்ளத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பழனி முன்னிலை வகித்தார். ஏரியூர் தமிழ் சங்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் நாகராஜ் சங்கம் குறித்து பேசினார். இதில், கடைகோடி கிராமங்களுக்கும் தமிழ் வளர்ச்சியை கொண்டு சேர்க்க வேண்டும். அழிந்து வரும் கலைகளை மீட்டெடுக்கவும், இலக்கிய நிகழ்வுகளை நடத்தி மக்களுக்கு இலக்கிய உணர்வுகளை ஏற்படுத்துதல், மாதந்தோறும் ஒரு கிராமத்தை தேர்ந்தெடுத்து திருக்குறள் பரப்புரை செய்தல், தமிழில் பெயர் சூட்டுதல் உட்பட சங்கத்தின் நோக்கங்கள் குறித்து எடுத்துரைத்தனர். இதில் தமிழ் ஆர்வலர்கள், கவிஞர்கள், பள்ளி கல்லுாரி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.