கோவில் திருவிழா பாதுகாப்பு ஆலோசனை
பாலக்கோடு: பாலக்கோடு புதுார் மாரியம்மன் கோவில் திருவிழா பாதுகாப்பு குறித்து, டி.எஸ்.பி., தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாரியம்மன் கோவில் திருவிழாவை, 12 கிராமத்தை சேர்ந்த அனைத்து சமூக மக்களும் சேர்ந்து கொண்டாடுவது வழக்கம். இதில், உள்ளுர், வெளியூர் மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொள்வர். இதில், பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல், போக்குவரத்து மாற்றம், வணிக நிறுவனங்களின் முன், நிறுத்தப்படும் வாகனங்களை வேறுபகுதியில் நிறுத்த நடவடிக்கை எடுப்பது, திருட்டு சம்பவங்களை தடுக்க, 'சிசிடிவி' கேமரா பொருத்துவது குறித்து, ஆலோசனை மேற்கொண்டார். இதில், இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம், எஸ்.ஐ., கோகுல் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.