உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கொலை செய்து 2 சடலங்கள் வீசப்பட்ட தடங்கத்தில் விசாரணை நடத்திய ஐ.ஜி.,

கொலை செய்து 2 சடலங்கள் வீசப்பட்ட தடங்கத்தில் விசாரணை நடத்திய ஐ.ஜி.,

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், தடங்கம் அடுத்த, புதிய சிப்காட் சாலை பகு-தியில், கொலை செய்யப்பட்ட நிலையில் அடையாளம் தெரி-யாத, 55 வயது ஆண் மற்றும், 50 வயது பெண் ஆகிய இருவரது சடலங்களை அழுகிய நிலையில் நேற்று முன்தினம் போலீசார் மீட்டனர். இது குறித்து, தர்மபுரி எஸ்.பி., மகேஷ்வரன், டி.எஸ்.பி., சிவராமன், அதியமான்கோட்டை இன்ஸ்பெக்டர் லதா ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். இதில், கொலை செய்து வீசப்பட்டவர்கள் எந்த பகுதியை சேர்ந்த-வர்கள். எதற்காக கொலை நடந்தது மற்றும் குற்றவாளிகள் குறித்து விசாரணையை தொடங்கினர். சேலம் - பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையிலுள்ள, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில், அதியமான்கோட்டை இன்ஸ்பெக்டர் லதா தலைமையில், 2 தனிப்படைகள் அமைத்து, தேனி மாவட்டத்தில், குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று, சடலங்கள் கிடந்த, புதிய சிப்காட் சாலை பகுதியில், கோவை மேற்கு மண்டல ஐ.ஜி., செந்தில்குமார் மற்றும் சேலம் டி.ஐ.ஜி., உமா, ஆகியோர் பார்வையிட்டு, வழக்கு விசாரணை குறித்து, தர்மபுரி எஸ்.பி., மகேஷ்வரனிடம் கேட்ட-றிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை