உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஹெல்மெட் அணிவதன் அவசியம் போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு

ஹெல்மெட் அணிவதன் அவசியம் போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு

ஹெல்மெட் அணிவதன் அவசியம்போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வுதர்மபுரி, செப். 27- ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டுனர்களுக்கு, தர்மபுரி போக்குவரத்து போலீசார் சிறுதானிய இனிப்பு வழங்கி பாராட்டினர்.விபத்தில்லா சாலைகளை உருவாக்க, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதில், டூவீலர் விபத்தில் அதிகளவிலான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதை கட்டுப்படுத்த, ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தர்மபுரியில், போக்குவரத்து போலீசார் மற்றும் சமுக ஆர்வலர்கள் இணைந்து, தர்மபுரி, 4 ரோடு பகுதியில், பைக் ஓட்டுனர்களிடம் ஹெல்மெட் அணிவது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், ஹெல்மெட் அணிந்து வந்தவர்களை டிராபிக் எஸ்.ஐ.,க்கள் சின்னசாமி மற்றும் சதீஸ்குமார் தலைமையில், சமுக ஆர்வலர்கள் ராகி உருண்டை, ராகி பிஸ்கட், கடலை மிட்டாய் உட்பட, 10 வகையான சிறுதானிய இனிப்பு வழங்கி பாராட்டினார்.ஹெல்மெட் அணியாமல், வந்த வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட அறிவுறுத்தினர். தொடர்ந்து, கார் ஓட்டுனர்கள், 'சீட் பெல்ட்' அணிந்து ஓட்ட, ஒலிபெருக்கி மூலம் அறிவுரை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை