உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ரூ.70 லட்சத்தில் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்த டிரான்ஸ்பார்மர்

ரூ.70 லட்சத்தில் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்த டிரான்ஸ்பார்மர்

கம்பைநல்லுார், தர்மபுரி மாவட்டம், இருமத்துார் துணை மின்நிலையத்தில் இருந்து, 60க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது. இங்கு, 2 டிரான்ஸ்பார்மர்களில் ஒன்று பழுதானதால் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக, பகலில் மூன்று மணி நேரமும், இரவில், சில மணி நேரமும் மட்டும் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. அதிலும் அடிக்கடி அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் பயிர்களை காப்பாற்ற முடியாமல், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இது குறித்து செய்தி, கடந்த, 7ம் தேதி, 'காலைக்கதிர்' நாளிதழில் வெளியானது.இந்நிலையில், இருமத்துார் துணை மின்நிலையத்தில் பழுதடைந்த டிரான்ஸ்பார்மருக்கு பதிலாக, 70 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிதாக டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. அதை நேற்று மக்கள் பயன்பாட்டிற்கு கடத்துார் கோட்ட செயற்பொறியாளர் சுப்பிரமணியன், தர்மபுரி கோட்ட எம்.ஆர்.டி., செயற்பொறியாளர் சரவணன் ஆகியோர் துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில், உதவி செயற்பொறியாளர்கள் சுரேஷ், ரமேஷ் மற்றும் மின்வாரிய அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ