கடன் பெற்று தராத மகளிர் சுய உதவி குழு தலைவியின் டூவீலர் தீ வைத்து எரிப்பு
அதியமான்கோட்டை: கடன் பெற்று தராததால், மகளிர் சுய உதவி குழு தலைவியின் ஸ்கூட்டரை தீ வைத்து எரித்தவரை, அதியமான்கோட்டை போலீசார் நேற்று கைது செய்தனர்.தர்மபுரி மாவட்டம், எட்டிமரத்துப்பட்டியை சேர்ந்தவர் முத்து-ராமன், 38. இவர் மனைவி பிரியா, 31. இவர், மகளிர் சுய உத-விக்குழு தலைவியாக உள்ளார். நேற்று முன்தினம் இரவு முத்து-ராமன் தன் வீட்டின் வினாயகர் கோவில் முன், அவருடைய ஹீரோ ஸ்பிளண்டர் பிளஸ் பைக் மற்றும் மனைவியின் ஹோண்டா டியோ ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு சென்றார். நேற்று காலை வந்து பார்த்த போது, பைக் மற்றும் ஸ்கூட்டர் தீயில் எரிந்து கருகியிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர், அதியமான்கோட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடம் வந்த போலீசார், அப்பகுதி, 'சிசி-டிவி' கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர். அதில், எட்டிமரத்துப்பட்டியை சேர்ந்த டிரைவர் துரை, 40, என்பவரை கைது செய்து விசாரித்தனர். அதில், மகளிர் சுய உதவி குழு தலைவி பிரியா, குழு மூலம், கிராம மக்களுக்கு கடனுதவி பெற்று தருகிறார். அதேபோல், என் குடும்பத்திற்கும் கடன் உதவி ஏற்பாடு செய்து தர கேட்ட போது, நான் கடன் வாங்-கினால், திரும்பி செலுத்த மாட்டேன் என பிரியா கூறினார். இதனால் ஆத்திரத்தில், அவருடைய வாகனங்களுக்கு தீயிட்டு கொளுத்தியதாக, போலீசாரிடம் அவர் கூறியுள்ளார்.