மேலும் செய்திகள்
திருக்குறள் பயிலரங்கம்
13-Oct-2025
பாப்பிரெட்டிப்பட்டி: அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வட்டங்களில், 'திருக்குறள் பயிற்சி வகுப்புகள்' நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கடத்துாரில் நடந்தது.திருக்குறள் திருப்பணிகள் திட்ட அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வட்டங்களின் கண்காணிப்பாளர் புலவர் வெங்கடாசலம் தலைமை வகித்தார்.தர்மபுரி, நல்லம்பள்ளி, காரிமங்கலம் வட்டங்களின் கண்காணிப்பாளர் புலவர் பரமசிவம் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வட்டங்களில் தலா, 15 பள்ளி, கல்லுாரிகளில் பயிற்சி வகுப்புகள் நடத்துவது என்றும், அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது. நுாலகர் சரவணன் வரவேற்றார். பதிப்பாசிரியர் திருவேங்கடம் நன்றி கூறினார்.
13-Oct-2025