உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / இரும்பு கம்பி திருடிய 3 பேருக்கு காப்பு

இரும்பு கம்பி திருடிய 3 பேருக்கு காப்பு

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஏ.பள்ளிப்பட்டி முதல் மஞ்சவாடி வரை சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது. இப் பணி நடக்கும் பகுதியில் கம்பிகள், டீசல் திருடு போவது வழக்கமாக இருந்து வந்தது. காளிப்பேட்டை அடுத்த தனியார் பெட்ரோல் பங்க் அருகில், சாலை பணிக்காக வைத்திருந்த கம்பிகளை கடந்த, 3 ல் மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து அங்குள்ள, 'சிசிடிவி' காட்சிகளை பார்த்தனர். அதில், பாப்பிரெட்டிப்பட்டி காளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த குமரன், 35, பட்டுகோணாம்பட்டியை சேர்ந்த டேவிட், 35, சுதேந்திரன், 32, ஆகியோர் கம்பிகளை திருடியது தெரிந்தது. அவர்களை, பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி