உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / டிராக்டர் டிரைவர் கொலை: கூலி தொழிலாளி கைது

டிராக்டர் டிரைவர் கொலை: கூலி தொழிலாளி கைது

பாலக்கோடு, டிச. 27-பாலக்கோடு சின்னாறு ஆற்று பாலம் அருகே, முன் விரோதத்தில் டிராக்டர் டிரைவர் பிளேடால் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார்.தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளி ஆற்றுப்பாலம் அருகே, நேற்று முன்தினம் இரவு ஆண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். மாரண்டஹள்ளி போலீசார், இறந்தவரின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.கொலை செய்யப்பட்டவர் கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிகோட்டை அருகே திம்ஜேபள்ளியை சேர்ந்த டிராக்டர் டிரைவர் ரகு, 35, என தெரியவந்தது. சம்பவ இடத்தில் சுற்றிய பஞ்சப்பள்ளி அடுத்த பி.புதுாரை சேர்ந்த லோகேஷ் என்ற கோவிந்தராவ்,25, என்பவரை பிடித்து விசாரித்தனர்.லோகேஷின் அண்ணன் சுரேஷ் என்பவரிடம், ரகு டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் லோகேஷின் அண்ணன் சுரேஷ்,30, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால், ரகுவை பழிவாங்க முடிவு செய்து, திட்டம் தீட்டிய லோகேஷ், நேற்று முன்தினம் இரவு ரகுவை மது அருந்த அழைத்துள்ளார். இருவரும் சேர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது போதையில் இருந்த ரகுவை, பிளேடால் கழுத்தறுத்து லோகேஷ் கொலை செய்து விட்டு, தப்பி ஓட முயன்றுள்ளார்.ஆனால், கொலை சம்பவம் குறித்து போலீசாருக்கு உடனடியாக தகவல் கிடைத்ததால், போலீசார் சம்பவ இடத்தில் சந்தேகத்தின் பேரில், லோகேசிடம் விசாரித்த போது உண்மை வெளிப்பட்டது.அவரை கைது செய்த போலீசார் பாலக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தர்மபுரி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை