உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு

டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு

கம்பைநல்லுார், தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த காடையாம்பட்டியை சேர்ந்தவர் சின்னசாமி, 45, இவர், நேற்று முன்தினம் இரவு, 8:15 மணிக்கு அதே பகுதியை சேர்ந்த, இடும்பாசூரன் என்பவரது தண்ணீர் டேங்க் டிராக்டரை ஓட்டிச் சென்றார்.கம்பைநல்லுார்-திப்பம்பட்டி சாலையில், கடம்பர அள்ளி அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையில் கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த சின்னசாமி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சின்னசாமி மனைவி ராதா மற்றும் உறவினர்கள், பொக்லைன் உதவியுடன், டிராக்டர் அடியில் சிக்கியிருந்த சின்னசாமியின் உடலை மீட்டனர். இது குறித்து கம்பைநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !