உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மண் கடத்திய டிராக்டர் பறிமுதல்

மண் கடத்திய டிராக்டர் பறிமுதல்

தர்மபுரி::தர்மபுரி புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் புவனமாணிக்கம், 26, மற்றும் தனி ஆர்.ஐ., ராஜிவ்காந்தி ஆகிய இருவரும், நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:15 மணிக்கு, ஏலகிரி பஞ்., போலம்பட்டியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் ரோந்து சென்றனர். அப்போது, அந்த வழியாக வந்த டிராக்டர் டிரைலரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில் அனுமதியின்றி ஒரு யூனிட் மண் ஏற்றி வந்தது தெரிந்தது. டிராக்டர் ஓட்டுனர் மற்றும் உரிமையாளரான தாதநாயக்கன்பட்டியை சேர்ந்த குருகணேஷ் தப்பியோடிய நிலையில், உதவி புவியியலாளர் புவனமாணிக்கம், டிராக்டர் மற்றும் டிரைலரை பறிமுதல் செய்து, தொப்பூர் போலீசில் ஒப்படைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை