உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பாலக்கோட்டில் ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்

பாலக்கோட்டில் ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்

பாலக்கோட்டில் ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்பாலக்கோடு, நவ. 10-பாலக்கோடு எம்.ஜி., சாலையிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில், தி.மு.க., பேரூர் கழக ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் பேரூர் கழக செயலாளர் முரளி தலைமையில் நடந்தது. மாவட்ட பொருளாளர் முருகன், பேரூர் கழக அவைத் தலைவர் அமானுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், வரும் சட்டசபை தேர்தலில், 200 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும், தி.மு.க., ஆட்சி அமைப்பதே லட்சியமாக கொண்டு தொண்டர்கள் பணியாற்ற வேண்டும். நடந்து முடிந்த லேக்சபா தேர்தலில், தொண்டர்கள் கடுமையாக உழைத்து, அனைத்து தொகுதிகளையும் வெற்றி பெற செய்ததை போன்று, வரும் தேர்தலிலும் வெற்றிக்காக தொண்டர்கள் கடுமையாக பாடுபட வேண்டும். மேலும், புதிய வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்கும் முகாமில், 18 வயது பூர்த்தியடைந்தவர்களை, வாக்காளர் பட்டியலில் சேர்க்க, உரிய பணிகளை மேற்கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டது. ஒன்றிய துணை செயலாளர் ரவி, பேரூர் கழக துணை செயலாளர்கள் பாபு, மாதேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை