உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு பயிற்சி

ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு பயிற்சி

பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகதிக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, தேர்தல் தொடர்பான பயிற்சி வகுப்பு நேற்று பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில், தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் செம்மலை தலைமையில் நடந்தது. இதில், வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், உள்ளிட்டவைகளை ஆன்லைன் மூலம் செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் தாசில்தார் செந்தில், தேர்தல் துணை தாசில்தார் மகேஸ்வரன், தேர்தல் முதுநிலை வருவாய் ஆய்வாளர் கார்த்திக், ஆர்.ஐ.,க்கள் சதீஷ், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை