உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பள்ளியில் மரக்கன்று நடும் விழா

பள்ளியில் மரக்கன்று நடும் விழா

பாப்பிரெட்டிப்பட்டி, கடத்துார் அடுத்த கேத்தி ரெட்டிப்பட்டியில், அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பள்ளி வளாகத்தில் சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில் மரம் நடும் விழா நடந்தது. உதவி தலைமை ஆசிரியர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். பட்டதாரி ஆசிரியர் நடராஜன் முன்னிலை வகித்தார். இதில், சுற்றுச்சூழலில் மாணவர்களின் பங்களிப்பு, பசுமை இல்லா வாயுக்களின் விளைவுகள், பூமியை பாதுகாக்க மாசில்லா காற்று, மரக்கன்றுகளை நடவு செய்ய மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், பள்ளியளவில் சுற்றுச்சூழல் மன்றத்தின் சிறப்பாக பணியாற்றிய மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விழாவில், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை