உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஸ்ரீ வெற்றி விகாஸ் மெட்ரிக் பள்ளியில் முப்பெரும் விழா

ஸ்ரீ வெற்றி விகாஸ் மெட்ரிக் பள்ளியில் முப்பெரும் விழா

பாப்பிரெட்டிப்பட்டி : -பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மோளையானுார், ஸ்ரீ வெற்றி விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது.அறிவியல் கண்காட்சியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள், 2022--23ம் கல்வியாண்டில் 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில், அரசு பொதுத்தேர்வில் சாதனை புரிந்து, பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும், 2023-24ம் கல்வியாண்டில் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளிலும், பள்ளியில் நடந்த விளையாட்டு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கும் பரிசளிப்பு, பாராட்டு விழா எனும் முப்பெரும் விழா நடந்தது.தாளாளர் நைனான் தலைமை வகித்தார். அறக்கட்டளை பொருளாளர் வேணு, துணைத் தலைவர் பழனிசாமி, துணை செயலாளர் சாமிக்கண்ணு, அறங்காவலர் குழு உறுப்பினர் குணசேகரன், மேலாளர் கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதுகலை தமிழாசிரியர் சிலம்பரசன் வரவேற்றார். முதல்வர் கலைவாணி ஆண்டறிக்கை வாசித்தார். அறக்கட்டளை தலைவர் ராஜேந்திரன், செயலாளர் டாக்டர் பழனிசாமி ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டி பேசினர். இதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது. பின் மாணவ மாணவியர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. முதுகலை ஆங்கில ஆசிரியர் சாம்ராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை