உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மரவள்ளி கிழங்குக்கு விலை நிர்ணயம் முத்தரப்பு கூட்டத்துக்கு வலியுறுத்தல்

மரவள்ளி கிழங்குக்கு விலை நிர்ணயம் முத்தரப்பு கூட்டத்துக்கு வலியுறுத்தல்

அரூர், முத்தரப்பு கூட்டத்தை கூட்டி, மரவள்ளி கிழங்கிற்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.தர்மபுரி மாவட்டத்தில், அரூர், நரிப்பள்ளி, தீர்த்தமலை, மொரப்பூர், கம்பைநல்லுார் உள்ளிட்ட, சுற்று வட்டார பகுதிகளில் நடப்பாண்டு, இறவை பாசனம் மற்றும் மானாவாரியாக, 30,000க்கும் மேற்பட்ட ஏக்கரில், விவசாயிகள் மரவள்ளி கிழங்கு நடவு செய்துள்ளனர். தற்போது, மரவள்ளிகிழங்கு அறுவடை துவங்கவுள்ள நிலையில், முத்தரப்பு கூட்டத்தை கூட்டி, மரவள்ளி கிழங்கிற்கு விலை நிர்ணயம் செய்ய, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.இது குறித்து, அரூர் அன்னை பசுமை பூமி துல்லிய பண்ணை விவசாயிகள் சங்க தலைவர் திருமலை கூறியதாவது:மரவள்ளிகிழங்கிற்கு தனியார் ஆலை உரிமையாளர்களால் மட்டுமே விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இதனால், விவசாயிகள் நஷ்டம் அடைகின்றனர். எனவே, ஆலை அதிபர்கள், வேளாண் விற்பனைத்துறை அதிகாரிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அடங்கிய குழு மூலம், விலை நிர்ணயம் செய்ய வேண்டும். மாவுசத்து அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யும்போது ஏத்தாப்பூர்-2, வெள்ளை தாய்லாந்து வகை கிழங்குகள், 30 முதல், 32 பாயின்ட்கள் வரை வந்தாலும், 28 பாயின்ட்க்கு மட்டுமே கணக்கிட்டு விலை வழங்கப்படுகிறது. எனவே முழு பாயின்ட்டுக்கும் விலை வழங்க வேண்டும். உள்ளூரில் ஜவ்வரிசி விற்பனையை ஊக்குவிப்பதுடன், அதை ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும். உயர் விளைச்சல் தரக்கூடிய ரகங்களை அறிமுகப்படுத்த வேண்டும். எனவே, மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றும் பொருட்டு, மாவட்ட நிர்வாகம் முத்தரப்பு கூட்டத்தை கூட்டி தீர்வு காண வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை