உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கரும்பு நடவு செய்ய முடியாமல் அவதி

கரும்பு நடவு செய்ய முடியாமல் அவதி

அரூர்: அரூர் பகுதியில், தொடர்மழையால் கரும்பு நடவு செய்ய முடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.தர்மபுரி மாவட்டம், அரூர், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி, கடத்துார் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில், அதிகளவில் கரும்பு சாகுபடி செய்வது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக போதிய மழையின்மையால் கரும்பு சாகுபடி செய்ய முடியாமல், விவசாயிகள் மாற்றுப்பயிருக்கு மாறினர். இந்நிலையில் நடப்பாண்டு நல்ல மழை பெய்ததால், வரட்டாறு மற்றும் வாணியாறு அணை, தடுப்பணைகள் மற்றும் விவசாய கிணறுகள் நிரம்பி உள்ளதுடன், ஓடைகளில் தண்ணீர் செல்கிறது. இதையடுத்து, கரும்பு நடவு செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், தாழ்வான பகுதியிலுள்ள வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளதுடன், மற்ற இடங்களில் ஈரப்பதம் அதிகமாக உள்ளது. இதனால், விவசாயிகள் நிலத்தை உழுது, மண்ணை காயவிட்டு பார் அமைக்க முடியாமல் தவிக்கின்றனர். கடந்த, 2 நாட்களாக அரூர் பகுதியில் பெய்த சாரல்மழை, கரும்பு சாகுபடி விவசாயிகளை கவலையில் ஆழ்த்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை