உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ரூ.29 லட்சத்துக்கு மஞ்சள் விற்பனை

ரூ.29 லட்சத்துக்கு மஞ்சள் விற்பனை

அரூர்:அரூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. மொரப்பூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் இருந்து, 78 விவசாயிகள், 440 மூட்டை மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், விரலி மஞ்சள் ஒரு குவிண்டால், அதிகபட்சமாக, 15,202 ரூபாய்க்கும், குறைந்தபட்ச குறைந்தபட்ச விலையாக, 12,608 ரூபாய்க்கும், விற்பனையானது. இதேபோல், கிழங்கு மஞ்சள், ஒரு குவிண்டால், அதிகபட்சமாக, 14,002 ரூபாய்க்கும், குறைந்தபட்ச விலையாக, 11,150 ரூபாய்க்கும் விற்பனையானது. மொத்தம், 440 மூட்டை மஞ்சள், 29 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை