உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ரூ.4.91 லட்சம் மதிப்பு குட்கா கடத்திய இரண்டு பேர் கைது

ரூ.4.91 லட்சம் மதிப்பு குட்கா கடத்திய இரண்டு பேர் கைது

மாரண்டஹள்ளி, தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி மற்றும் காரிமங்கலம் அருகே கார் மற்றும் சரக்கு வாகனத்தில், 4.91 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 773 கிலோ குட்காவை கடத்திய, 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு மாரண்டஹள்ளி - வெள்ளிசந்தை சாலையில் வாகன சோதனை நடத்தினர். அவ்வழியாக வந்த ஹோண்டா சிட்டி காரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில், 1.82 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 262 கிலோ குட்காவை கடத்தி வந்தது தெரிந்தது. அதை காருடன் போலீசார் பறிமுதல் செய்து, காரை ஓட்டி வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிரகாஷ்குமார், 25, என்பவரை கைது செய்தனர்.இதேபோல், காரிமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., சுந்தரமூர்த்தி தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு காரிமங்கலம் அடுத்த கும்பாரஹள்ளி சுங்கச்சாவடியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த, கர்நாடக மாநில பதிவெண் கொண்ட ஈச்சர் வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில், 511 கிலோ எடைகொண்ட, 3.09 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது. அதை வாகனத்துடன் போலீசார் பறிமுதல் செய்தனர். சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த கர்நாடகாவை சேர்ந்த டிரைவர் ரவி, 44, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை