மேலும் செய்திகள்
நகை கடையில் கொள்ளை வாலிபால் வீரர் கைது
11-Oct-2025
இண்டூர்: தர்மபுரி மாவட்டம், இண்டூர் அருகே அ.செக்காரப்பட்டி கிராமத்தில் சுப்ரமணியன், 40 என்பவரின் நகைக்கடையில் கடந்த மாதம், 23 இரவில் கொள்ளை முயற்சி நடந்தது. அதேபோல், அக்., 26 அன்று அதிகாலை அதியமான்கோட்டை போலீஸ் ஸ்டேஷன் அருகே இருந்த நகைக்கடை பூட்டை உடைத்து, கொள்ளை முயற்சி நடந்தது. மேலும், இண்டூர் அடுத்த சோம்பட்டியில் பஞ்., செயலர் சம்பத்குமார் வீட்டில், 43 பவுன் நகை, அரை கிலோ வெள்ளி, 25,000 ரூபாய் திருட்டு போனது. முகமூடி கும்பல் அடுத்தடுத்து கைவரிசை காட்டியது, போலீசாரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.இந்த சம்பவங்களிலும் சிவப்பு நிற காரில், முகமூடி அணிந்து வந்த கும்பல் அங்கிருந்த, 'சிசிடிவி' கேமராக்கள் மீது, கறுப்பு ஸ்பிரே அடித்து விட்டு கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. எனவே, மேற்கொண்ட மூன்று சம்பவங்களிலும், கொள்ளையில் ஈடுபட்டது ஒரே கும்பலா, அல்லது வெவ்வேறு கும்பல், ஒரே சமயத்தில் கைவரிசை காட்டினார்களா என, தனிப்படை போலீசார் விசாரித்து வந்தனர்.இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன், 39, கோவை மாவட்டம், சூலுாரை சேர்ந்த வெங்கடேசன், 32, ஆகியோர் இந்த திருட்டில் ஈடுபட்டது தனிப்படை போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அவர்களை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணையில், அவர்கள் மீது ஏற்கனவே பல திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. கைதான இருவரிடமிருந்து, 2 கார்கள், 50 பவுன் நகை, அரை கிலோ வெள்ளி பொருட்கள், 1.32 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டன.
11-Oct-2025