உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை பார்க்க சென்ற இருவர் லாரி மோதி பலி

விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை பார்க்க சென்ற இருவர் லாரி மோதி பலி

தர்மபுரி: தர்மபுரி அருகே, விபத்தில் காயமடைந்தவர்களை பார்க்க சென்ற இருவர், லாரி மோதி பலியாகினர். தர்மபுரி அடுத்த, செண்மாண்டகுப்பம் பஞ்., முத்துப்பட்டியை சேர்ந்த ஊர்கவுண்டர் மார்க்கண்டன், 60. அதே ஊரை சேர்ந்த அவரது உறவினர் வாசுகி, 45. சாலை விபத்தில் காயமடைந்து, கோணங்கிநாயக்கனஹள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், சிகிச்சை பெற்று வரும் உறவினர்களான, 3 பேரை பார்க்க, நேற்று முன்தினம் மாலை இருவரும், டி.வி.எஸ்., மொபட்டில் சென்றனர். பின் ஊர் திரும்ப, கிருஷ்ணகிரி - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் அன்றிரவு, 11:30 மணிக்கு குண்டலபட்டி பிரிவு சாலையில் மொபட்டில் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் மீது, சேலத்திலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்ற லாரி மோதியது. இதில், மார்க்கண்டன் சம்பவ இடத்திலேயே பலியானார். பலத்த காயமடைந்த வாசுகி, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். குண்டலபட்டி பிரிவு சாலையில் அடிக்கடி விபத்து நடப்பதை கண்டித்து, அப்பகுதி மக்கள், விபத்து நடந்த பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை, மதிகோன்பாளையம் போலீசார், சமாதானப் படுத்தி அனுப்பினர்.விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரான, திருச்சி மாவட்டம், மணப்பாறையை சேர்ந்த முத்துசாமி, 62, ஈரோட்டிலிருந்து நுால் லோடுடன் குஜராத் சென்றது தெரியவந்தது. அவரை மதிகோன்பாளையம் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை