மேலும் செய்திகள்
கஞ்சா வழக்கு6 பேருக்கு தண்டனை
16-Apr-2025
தேன்கனிக்கோட்டை:கெலமங்கலம் எஸ்.எஸ்.ஐ., மாரியப்பன், 55. கடந்த, 2015 அக்., 20ல், தளியில் தலைமை காவலராக பணியாற்றிய போது, கர்நாடக - தமிழக எல்லையிலுள்ள கும்ளாபுரம் சோதனைச்சாவடியில் பணியில் இருந்தார். அங்கு வந்த கர்நாடகா மாநிலம், ஆனைக்கல்லை சேர்ந்த சீனிவாசன், 37, பெங்களூரு மது, 33, தளியை சேர்ந்த உமேஷ், 33, ஆகியோர், அவரை கத்தியால் வெட்டி விட்டு தப்பினர். தளி போலீசார், மூவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு, தேன்கனிக்கோட்டை சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு நடக்கும் போதே உமேஷ் உயிரிழந்தார். நீதிபதி ஹரிஹரன் நேற்ற வழக்கை விசாரித்து சீனிவாசன், மதுவுக்கு தலா, 10 ஆண்டு சிறை, தலா, 10,000 ரூபாய் அபராதம், கட்ட தவறினால் மேலும், 6 மாத சிறை தண்டனை வழங்கினார். அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்த குற்றத்திற்காக தலா, 2 ஆண்டு சிறை தண்டனை, தலா, 5,000 ரூபாய் அபராதம், கட்ட தவறினால் மேலும் ஒரு மாத சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். அபராத தொகையில், 25,000 ரூபாயை பாதிக்கப்பட்ட எஸ்.எஸ்.ஐ., மாரியப்பனுக்கு வழங்க உத்தரவிட்டார். வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ரவீந்திரநாத் ஆஜராகினார்.
16-Apr-2025