மேலும் செய்திகள்
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 283 மாணவர்கள் 'ஆப்சென்ட்'
03-Mar-2026
தர்மபுரி:அரூர் அருகே, பிளஸ் 2 பொதுத்தேர்வில் 'பிட்' அடித்த, தனியார் பள்ளி மாணவர்கள் இருவரை, சிறப்பு பறக்கும் படையினர் நேற்று முன்தினம் பிடித்தனர்.பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வில் நேற்று முன்தினம், வேதி-யியல் தேர்வு நடந்தது. இதில், தர்மபுரி மாவட்டம், அரூரிலுள்ள சில தேர்வு மையங்களில் தனியார் பள்ளிகள் இயக்குனர் சுகன்யா, தேர்வுகள் இயக்கக இணை இயக்குனர் ராஜேந்திரன், உதவி இயக்குனர் சாந்தகுமார் ஆகியோர் தலைமையிலான சிறப்பு பறக்கும் படை-யினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அரூர் பகுதியிலுள்ள, 2 தனியார் பள்ளிகளில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய, 2 மாணவர்கள், 'பிட்' வைத்து தேர்வு எழுதியது தெரிந்தது. இதை-யடுத்து, அவர்களிடமிருந்த விடைத்தாள்கள் பறிமுதல் செய்யப்-பட்டன. இந்த முறைகேடு தொடர்பாக, சம்மந்தப்பட்ட தனியார் பள்ளியில், கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
03-Mar-2026