உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / காரிமங்கலத்தில் யுகாதி தேர் திருவிழா

காரிமங்கலத்தில் யுகாதி தேர் திருவிழா

காரிமங்கலம்: காரிமங்கலம் மந்தை வீதி மாரியம்மன் கோவிலில், யுகாதி தேர் திருவிழா நேற்று நடந்தது.தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் டவுன், மந்தை வீதி மாரி-யம்மன் கோவிலில், 46ம் ஆண்டு யுகாதி தேர் திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.நேற்று காலை யுகாதி பண்டிகையையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, அம்மன் திருவீதி உலா நடந்தது. இதில், தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மணி ஆகியோர் தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். மாலையில் கும்மி நடனமும், நாளை சயன உற்சவம், கொடி இறக்கம் ஆகியவை நடக்கிறது.விழாவில், விழா குழு தலைவர் மனோகரன், துணைத்தலைவர் சீனிவாசன், மலைக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் கொள்-ளுப்பட்டி மாது, முன்னாள் தலைவர் கவுரி திருக்குமரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !