உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / டாஸ்மாக்கை அகற்றக்கோரி கிராம சபைக்கூட்டம் முற்றுகை

டாஸ்மாக்கை அகற்றக்கோரி கிராம சபைக்கூட்டம் முற்றுகை

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பொம்மிடியில், குடியரசு தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம், உதவி செயற்பொறி-யாளர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது. ஒன்றிய பணி மேற்-பார்வையாளர் சியாமளா முன்னிலை வகித்தார். ஊராட்சி செய-லாளர் ராஜிவ் காந்தி வரவேற்றார்.இதில், புதிய தார்ச்சாலைகள் அமைத்தல், ஜெயந்தி காலணி சுடு-காட்டு பாதை சுத்தம் செய்தல், உள்ளிட்ட பல்வேறு தீர்மா-னங்கள் நிறைவேற்றப்பட்டன.அப்போது, துரிஞ்சிப்பட்டி ஜமாத் முத்தவல்லி ஜீலானி உள்-ளிட்ட, 100க்கும் மேற்பட்ட மக்கள், அப்பகுதியிலுள்ள அரசு மதுபான கடையை அகற்ற கோரியும், தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும், அதிகாரிகளை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பி கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி