உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த வீரியம்பட்டி அருகே விநாயகர், காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. முன்னதாக, அதிகாலை முதலே விநாயகர் சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து, காளியம்மன் பரிவார மூர்த்திகள், கோபுர கலசத்திற்கு சிறப்பு பூஜை நடந்தது. இரண்டாம் கால யாக பூஜை செய்து, சிவாச்சாரியார்கள் பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தத்தை கலசம் மீது ஊற்றி அபிஷேகம் செய்தனர். இதில், ஓய்வுபெற்ற மக்கள் தொடர்பு அலுவலர் நடேசன் கலந்து கொண்டார். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், விழா குழுவினர் செய்திருந்தனர். நுாற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை