உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் செயல்முறை விளக்க மையம்

ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் செயல்முறை விளக்க மையம்

தர்மபுரி: இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்-படி, வரும் தமிழக சட்டசபை தேர்தலை முன்-னிட்டு, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள, 5 சட்டசபை தொகுதிகளிலும், ஓட்டுபதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து, வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க-பட்டு வருகிறது. இதில், தேர்தல் பணியில் ஈடு-படும் அலுவலர்களின் பயிற்சிக்காகவும், ஒவ்-வொரு சட்டசபை தொகுதிக்கும் தலா, 16 ஓட்டுப்-பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்-டது.இதன் மூலம், விழிப்புணர்வு ஏற்படுத்த அங்-கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்-னிலையில், அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவ-லர்களுக்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் நேற்று வழங்கப்பட்டன. தொடர்ந்து, தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் செயல்முறை விளக்க மையத்தை, கலெக்டர் சதீஸ் துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை