மேலும் செய்திகள்
போனஸ் கேட்டு ஆர்ப்பாட்டம்
15-Oct-2024
பள்ளிப்பாளையம்: தீபாவளி போனஸ் பேச்சு வார்த்தை எப்போது துவங்கும் என, பள்ளிப்பாளையம் விசைத்தறி தொழிலாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் விசைத்தறி முக்கிய தொழிலாக உள்ளது. விசைத்தறி தொழிலில், 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். தொழிலா-ளர்களுக்கு தீபாவளி போனஸ், பேச்சு வார்த்தை நடத்தி சதவீதம் அடிப்படையில் வழங்கப்படுவது வழக்கம். இந்தாண்டு தீபாவளி போனஸ் குறித்து பேச்சு வார்த்தை நடத்தி புதிய ஒப்பந்தம் போட வேண்டும். கடந்த 5ம் தேதி, நாமக்கல் மாவட்ட விசைத்-தறி தொழிலாளர் சங்கத்தினர், பள்ளிப்பாளையம் வட்டார விசைத்தறி உரிமையாளர் சங்கத்தின் நிர்வாகிகளுக்கு பேச்சு வார்த்தை நடத்த கடிதம் கொடுத்தனர். ஆனால் உரிமையாளர்கள் சங்கத்தினர் பேச்சு வார்த்தைக்கு அழைக்க வில்லை.வழக்கமாக, ஒரு மாதத்திற்கு முன்பே விசைத்தறி தொழிலாளர்க-ளுக்கு தீபாவளி போனஸ் பேச்சு வார்த்தை பல கட்டமாக நடக்கும். அதன் பின்பே இறுதியாக ஒப்பந்தம் முடிவாகும். இன்னும் தீபாவளிக்கு இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ளது. ஆனால் இதுவரை பேச்சு வார்த்தை துவக்க வில்லை. போனஸ் பேச்சு வார்த்தை எப்போது துவங்கும் என, தொழிலாளர்கள் எதிர்-பார்ப்பில் உள்ளனர். மேலும் பேச்சு வார்த்தை உடனடியாக துவக்க வேண்டும் என, வலியுறுத்தி , நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் வரும், 20ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
15-Oct-2024