உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மொபட் வீலில் சேலை சிக்கி தவறி விழுந்த பெண் சாவு

மொபட் வீலில் சேலை சிக்கி தவறி விழுந்த பெண் சாவு

தர்மபுரி, தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த, அண்ணாமலைபட்டியை சேர்ந்த பழனிசாமி, 65, இவரது மனைவி இந்திரா, 60, இந்த தம்பதிக்கு சிங்காரம், சரவணன் என்ற இரு மகன்கள், மகாலட்சுமி என்ற மகள் உள்ளனர். இந்த நிலையில், புதிதாக கட்டிய வீட்டின் கிரக பிரவேஷத்திற்கு உறவினர்களுக்கு அழைப்பு விடுக்க நேற்று முன்தினம் மாலை, 4:45 மணிக்கு அரூரில் இருந்து தர்மபுரி நோக்கி, டி.வி.எஸ்., மொபட்டில் வந்தனர். ராஜபாட்டை அடுத்த, காமராஜ் நகர் அருகே வந்தபோது, இந்திராவின் சேலை மொபட்டின் பின் வீலில் சிக்கியதால், இருவரும் மொபட்டின் இருந்து சாலையில் விழுந்தனர். இதில், காயமடைந்த இருவரையும், 108 அவசர ஆம்புலன்ஸ் மூலம், தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இந்திரா இறந்து விட்டதாக தெரிவித்தனர். தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை