தென்னை மரத்திலிருந்து விழுந்த தொழிலாளி சாவு
போச்சம்பள்ளி: திருவண்ணாமலை மாவட்டம், சமுத்திர ஏரிக்கரையை சேர்ந்தவர் குமார், 36. இவர், தென்னை மரத்தில் தேங்காய் பறிக்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு குடி பழக்கம் இருந்தது. நேற்று காலை, 10:00 மணிக்கு கரியகவுண்டனுாரை சேர்ந்த தங்-கவேல், 70, என்பவரின் விவசாய தோட்டத்தில் தேங்காய் பறிக்க மரத்தில் ஏறும்போது, தவறி விழுந்து பலியானார். நாகரசம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.