உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கள்ளக்காதல் விவகாரத்தில் தொழிலாளி கொலை; நண்பர் கைது

கள்ளக்காதல் விவகாரத்தில் தொழிலாளி கொலை; நண்பர் கைது

மொரப்பூர்: அரூர் அருகே, கள்ளக்காதல் விவகாரத்தில், தொழிலாளியை கொன்ற, பியூட்டி பார்லர் ஊழியர் கைது செய்யப்பட்டார்.தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கணபதிப்பட்டியை சேர்ந்தவர் ராஜாராம், 32. கோவையில் கட்டட வேலை செய்து வந்தார். இவரது மனைவி தமிழ்இலக்கியா, 25. தம்பதிக்கு, 2 பெண், ஒரு ஆண் குழந்தை. கடந்த ஓராண்டுக்கு முன், அரூரிலுள்ள பியூட்டி பார்லரில் வேலை கற்றுக்கொள்ள சென்ற தமிழ் இலக்கி-யாவிற்கும், அங்கு பணியாற்றிய சரவணன், 25, என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. ராஜாராம் இல்லா-தபோது, அவரது வீட்டிற்கு சரவணன் அடிக்கடி சென்று வந்-துள்ளார். இதனால், ராஜாராம், தமிழ் இலக்கியாவிற்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த, 21ல் கோவையிலிருந்து ராஜாராம் ஊருக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு தம்பதிக்குள் தகராறு ஏற்-பட்டுள்ளது. நேற்று காலை கல்லடிப்பட்டியிலுள்ள நிழற்கூ-டத்தில் ராஜாராம் தலையில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்தார். சம்பவ இடம் வந்த, மாவட்ட எஸ்.பி., மகேஸ்வரன், அரூர் டி.எஸ்.பி., கரிகால் பாரிசங்கர் விசாரணை மேற்கொண்டனர். மொரப்பூர் போலீசார், சரவணனை கைது செய்தனர். இது குறித்து போலீசார் கூறுகையில், 'நண்பர்களான ராஜாராம், சர-வணன் இருவரும் நேற்று முன்தினம் இரவு மது அருந்தினர். அப்-போது, மனைவியிடம் உள்ள தொடர்பு குறித்து சரவணனிடம், ராஜாராம் கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்-பட்டதில், ஆத்திரமடைந்த சரவணன், ராஜாராம் தலையில் கல்லை துாக்கி போட்டு கொலை செய்துள்ளார்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ