மத்திய அரசை கண்டித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி: மத்திய அரசை கண்டித்து, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் கோவிந்தசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.தர்மபுரி டவுன் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் நடந்த ஆர்ப்-பாட்டத்துக்கு, மாநில செயலாளர் அமிர்தலிங்கம், மாவட்ட செய-லாளர் முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், பொது-மக்களை பாதிக்கும் வகையில் உள்ள, மக்கள் விரோத பட்-ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட பொருளாளர் சிவா, மாநில குழு உறுப்பினர் பாண்டியம்மாள், நிர்-வாகிகள் மாரியப்பன், கிருஷ்ணவேணி, வெங்கடாச்சலம் உள்பட பலர் பங்கேற்றனர்.