உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / உலக கால்நடை மருத்துவ தினம் நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி

உலக கால்நடை மருத்துவ தினம் நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி

தர்மபுரி,:கால்நடை பராமரிப்பு துறை, தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அலுவலர்கள் சங்கம் இணைந்து, உலக கால்நடை மருத்துவ தினத்தை முன்னிட்டு, நாய் மற்றும் பூனைகளுக்கான இலவச தடுப்பூசி முகாம், நேற்று இலக்கம்பட்டி கால்நடை பெரு மருத்துவமனையில் நடந்தது. ரேபிஸ் நோயால் பாதித்த நாய்கள், வீட்டு விலங்குகள் மற்றும் மனிதர்களை கடிப்பதால், அவர்களும் நோய் பாதிப்புக்கு ஆளாகின்றனர். இதில், ரேபிஸ் நோய் பாதிப்பிலிருந்து தடுக்க, நாய்களுக்கு வருடம் ஒரு முறை, கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ள, கால்நடை மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். அதன்படி நேற்று, இலக்கியம்பட்டி அரசு கால்நடை பெரு மருத்துவமனையில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகம் நடந்தது. நேற்று நடந்த முகாமில், 100 டோஸ்கள் போடப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதில், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் கோவிந்தராசு, துணை இயக்குனர் விஷ்ணு காந்தன், பிரதம மருத்துவர் ஜெயந்தி, கால்நடை உதவி மருத்துவர்கள் சரவணன், அருள், சார்லஸ், தசரதன் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !