மேலும் செய்திகள்
செல்வ விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை
22-Oct-2024
தர்மபுரி, நவ. 20-சங்கடஹர சதுர்த்தியையொட்டி, தர்மபுரி மாவட்டத்திலுள்ள பல்வேறு விநாயகர் கோவில்களில், நேற்று சிறப்பு பூஜை மற்றும் அலங்காரங்கள் நடந்தன.சங்கடஹர சதுர்த்தியையொட்டி, தர்மபுரி எஸ்.வி., ரோடு சாலைவிநாயகர் கோவிலில், நேற்று காலை, பல்வேறு வகையான வாசனை திரவியங்களால், சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. பின், மூலவர் விநாயகருக்கு முத்தங்கி கவசம் சாத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல், இலக்கியம்பட்டி சித்தி விநாயகர் கோவில், அன்னசாகரம் கோடி விநாயகர் கோவில், வெண்ணாம்பட்டி ரயில்வேகேட் குபேர கணபதி கோவில், தேர்நிலையம் செல்வகணபதி விநாயகர் கோவில், அப்பாவு நகர் கற்பக விநாயகர் கோவில் உட்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலுள்ள விநாயகர் கோவில்களில், சங்கடஹர சதுர்த்தியையொட்டி, நேற்று சுவாமிக்கு அபிஷேக, அலங்காரங்கள், பூஜைகள் நடந்தன.
22-Oct-2024