மேலும் செய்திகள்
கரூர் மாவட்டத்தில் உலக யோகா தின விழா
22-Jun-2025
தர்மபுரி, தர்மபுரி மாவட்டம் முழுவதும், சர்வதேச யோகா தினத்தையொட்டி நேற்று, பல்வேறு இடங்களில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், ஆசிரியர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என பலர், யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.யோகா தினத்தை முன்னிட்டு, தர்மபுரி மாவட்ட நிர்வாகம் சார்பில், நேற்று காலை, 8:00 மணி அளவில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் யோகா பயிற்சிகள் நடந்தது. யோகா பயிற்சிக்கு மகளிர் திட்ட இயக்குனர் லலிதா தலைமை வகித்து பயிற்சியை தொடங்கி வைத்தார். இதில், யோகா பயிற்சியாளர்கள் மூச்சுப்பயிற்சி, பிராணாயாமம், தியானம் ஆகியவை செய்து காண்பித்தனர். நிகழ்ச்சியில் ஏராளமான கல்லுாரி மாணவர்கள், மாணவியர், நடை பயிற்சியாளர்கள், மகளிர் திட்ட பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். அதேபோல், அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தேசிய மாணவர் படை சார்பில், யோகா பயிற்சி நடந்தது. தலைமை ஆசிரியர் காமராஜ் தொடங்கி வைத்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் அன்புசெல்வம், என்.சி.சி., அலுவலர் முருகேசன் உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அதேபோல், அதியமான்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. அதில், 50 என்.சி.சி., மாணவர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். தர்மபுரி டவுன் பகுதியில், பா.ஜ., மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் நடந்த பயிற்சியில், பா.ஜ.,வினர் பலர் கலந்து கொண்டனர். பரிசலில் யோகாதர்மபுரி அரசு கலை கல்லுாரி என்.சி.சி., மாணவர்கள் யோகாசனம் செய்தனர். தமிழ்நாடு, 12-வது பட்டாலியன் சார்பில், என்.சி.சி., அலுவலர் தீர்த்தகிரி தலைமையிலான குழுவினர் யோகா நிகழ்ச்சி நடத்தினர். இதில், 80 என்.சி.சி., மாணவர்கள் காவிரியாற்றின் நடுவே பரிசலில் இருந்தபடி யோகாசனங்களை செய்தனர். அதேபோல, பரிசல் துறையிலும் அமர்ந்து யோகாசனம் செய்தனர்.* அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தலைமையாசிரியர் ஆறுமுகம் தலைமையில், உடற்கல்வி ஆசிரியர் பழனிதுரை, பல்வேறு யோகாசனங்களை செய்து காண்பித்தார். அதை தொடர்ந்து, மாணவர்கள் யோகா பயிற்சி செய்தனர். இதில் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மொரப்பூர், கம்பைநல்லுார் உள்ளிட்ட இடங்களிலும் யோகா தினம் கொண்டாடப்பட்டது.
22-Jun-2025