உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது

அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், கொல்லஹள்ளி அடுத்த உத்தனுார் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம், 56. இவர் தர்மபுரி அரசு போக்குவரத்துக் கழக நகர கிளையில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு தர்மபுரியில் இருந்து மிட்டாரெட்டிஹள்ளி வழித்தடத்தில், 35ம் எண் கொண்ட அரசு நகர பஸ்சை ஓட்டி சென்றார்.அப்போது, அதே ஊரை சேர்ந்த சதீஸ்குமார் என்பவர் பஸ்சின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி உள்ளார். இதுகுறித்து, பஸ் டிரைவர் செல்வம், அதியமான்கோட்டை போலீசில் புகாரளித்தார். அதன்படி போலீசார் சதீஷ்குமாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி