உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய வாலிபர் கைது

பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய வாலிபர் கைது

ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, மிட்டப்பள்ளியை சேர்ந்தவர் அஜய், 24. பெரிய தள்ளப்பாடி பகுதியை சேர்ந்த, 23 வயதுள்ள பெண்ணை, கடந்த, 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, 4 முறை கர்ப்பமாக்கி உள்ளார். ஒவ்வொரு முறையும் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, கருக்கலைப்பு செய்ய வைத்துள்ளார். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பெண், நேற்று ஊத்தங்கரை போலீசில் புகார் அளித்தார்.அதன்படி விசாரணை மேற்கொண்ட போலீசார், அஜய்யை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை