உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வீட்டின் வெளியே நின்றிருந்த மூதாட்டியிடம்7 பவுனை பறித்து சென்ற வாலிபர் கைது

வீட்டின் வெளியே நின்றிருந்த மூதாட்டியிடம்7 பவுனை பறித்து சென்ற வாலிபர் கைது

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சஞ்சீவி செட்டி தெருவை சேர்ந்தவர் ராஜம்மாள், 67. இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துள்ளார். இவரது இரு மகன்கள், மகள்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசிக்கின்றனர். ராஜம்மாள் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். கடந்த, 23 அதிகாலை, வீட்டில் புழுக்கம் அதிகமாக இருந்ததால், துாங்க முடியாமல் வீட்டிற்கு வெளியில் காற்று வாங்க தெருவில் நின்றுள்ளார்.அப்போது அவ்வழியாக வந்த மர்ம நபர், ராஜம்மாள் கழுத்தில் இருந்த, 7 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினார். எஸ்.பி., தங்கதுரை, பர்கூர் டி.எஸ்.பி., முத்துகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் வளர்மதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரித்தனர். மேலும், எஸ்.ஐ., வினோத்குமார் தலைமையில், தனிப்படை அமைத்து மர்ம நபரை தேடி வந்தனர்.இந்நிலையில், பர்கூர் போலீசார், திருப்பத்துார் கூட்ரோடு பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிந்தனர். அப்போது, சந்தேகப்படும்படியாக நடந்து வந்த வாலிபரை விசாரித்தபோது, முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவரை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரித்தனர்.அதில், பர்கூர் சஞ்சீவி செட்டி பகுதியை சேர்ந்த சரவணன் மகன் விஷ்ணு, 22, என்பதும், ராஜம்மாளின் எதிர் வீட்டில் வசிப்பதாகவும், அதிகாலை ராஜம்மாள் வெளியே வந்த போது, 7 பவுன் செயினை பறித்துச் சென்றதாகவும் ஒப்புக் கொண்டார்.பர்கூர் போலீசார் விஷ்ணுவை கைது செய்து, 7 பவுன் செயினை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை