உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குரூப் 2 தேர்வு - 5778 பேர் ஆப்சென்ட்

குரூப் 2 தேர்வு - 5778 பேர் ஆப்சென்ட்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 தேர்வினை 16,915 பேர் எழுதிய நிலையில் 5778 பேர் எழுதவில்லை.குருப் 2 தேர்வெழுத 22,693 பேர் விண்ணப்பத்திருந்தனர். இதற்காக மாவட்டம் முழுவதும் 83 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. 27 நடமாடும் குழுக்கள், 8 பறக்கும் படை, 86 வீடியோஒளிப்பதிவாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். விண்ணப்பத்திருந்த 22,693 பேரில் 16,915 தேர்வு எழுதினர். 5778 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. தேர்வு மையத்தில் கலெக்டர் பூங்கொடி ஆய்வு மேற்கொண்டார். சப் கலெக்டர் கிசான் குமார், பி.ஆர்.ஓ.,நாக ராஜ பூபதி, தாசில்தார் ஜெயபிரகாஷ் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ