உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ராஜகாளியம்மன் கோயில் திருவிழா

ராஜகாளியம்மன் கோயில் திருவிழா

நத்தம், : -நத்தம் மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள ராஜகாளியம்மன் கோயில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.திருவிழா ஏப்.23 ல் சந்தனக் கருப்பு சுவாமி கோவிலில் இருந்து கன்னிமார் தீர்த்தம் அழைத்து வர தொடங்கியது. அன்று இரவு அம்மன் குளத்தில் இருந்து கரகம் ஊர்வலமாக கோயிலுக்கு அழைத்து வரப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை நடந்தது.தொடர்ந்து திருவிளக்கு பூஜை, பொங்கல் வைத்தல், மாவிளக்கு, முளைப்பாரி, கிடாய் வெட்டுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன.இதை தொடர்ந்து நேற்று இரவு கரகம் அம்மன்குளம் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. சுற்றுப்பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ