மேலும் செய்திகள்
சாதித்த அக் ஷயா பள்ளி
20-Feb-2025
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் அக் ஷயா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் கால்பந்தாட்ட நவீன புல்தரை உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழா ,பள்ளி மன்றங்களுக்கு இடையேயான கால்பந்து கூடைப்பந்து போட்டிகள் நடந்தது. தலைமை மாணவர்கள் தர்ஷிகா, டேனியல் விளையாட்டு வீரர்களை அறிமுகப்படுத்தினர். மாவட்ட கால்பந்தாட்ட கழகச் செயலாளர் எஸ்.சண்முகம் விளையாட்டு அரங்கத்தினை திறந்து வைத்தார். பள்ளி நிர்வாகி புருசோத்தமன், தாளாளர் சுந்தராம்பாள் குத்துவிளக்கு ஏற்றினார். பள்ளிச் செயலாளர் பட்டாபிராமன் கோப்பை , சான்றிதழ் வழங்கினார். பள்ளி முதல்வர் சவும்யா நன்றி கூறினார்.
20-Feb-2025