மேலும் செய்திகள்
முன்னாள் படைவீரர்கள் குறைகேட்பு கூட்டம்
18-Aug-2024
திண்டுக்கல்: திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி அறிக்கை:திண்டுக்கல் நகர், தாடிக்கொம்பு, நத்தம், வடமதுரை, பழநி, ஆயக்குடி, ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம், பட்டிவீரன்பட்டி,கொடைக்கானல் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட கோயில் பாதுகாப்புப் பணிக்கான 37 இடங்களுக்கு ஒப்பந்த ஊதிய முறையில் பணி நியமனம் செய்ய நேர்காணல் நடக்க உள்ளது. 62 வயதிற்குட்பட்ட முன்னாள் படைவீரர்கள், உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகத்திற்கு அசல் படைவிலகல் சான்று, அடையாள அட்டையுடன் நேரில் அணுகி பயன்பெறலாம். மேலும் விபரங்களை 0451-2 460 086 ல் தெரிந்துகொள்ளலாம் எனக்குறிப்பிட்டுள்ளார்.
18-Aug-2024